ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல்
x

நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல் நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மானூர் வட்டார கிளையின் 14-வது அமைப்பு தேர்தல் வீரமாணிக்கபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக சேரன்மாதேவி வட்டார செயலாளர் பவுல், துணை தேர்தல் ஆணையாளராக சுந்தர் ஜெப செல்வன் ஆகியோர் செயல்பட்டனர். தேர்தல் முடிவில் தலைவராக மாரியப்பன், செயலாளராக செண்பகராஜன், பொருளாளராக கோமதி, துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினராக 19 பேரும் போட்டி இன்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை மாநில செயலாளர் பிரமநாயகம், மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


Next Story