ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
x

நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் வீரமாணிக்கபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பிரமநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் காலை சிற்றுண்டி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதுபோல் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

இதை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெறும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை பள்ளி மாணவர்களின் உரிமை மீட்பு மாநாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து 500 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். அதை தொடர்ந்து வருகிற 24-ந்தேதி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 1,000 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.

1 More update

Next Story