ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 2 July 2023 1:15 AM IST (Updated: 2 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடந்தது.

நீலகிரி


கோத்தகிரி


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மயில் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். கூட்டத்தில் ஆசிரியர் நியமனம், பதவி உயர்விற்கு கொண்டு வரப்பட்டு உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநில அளவிலான பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Next Story