ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெமிலியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

நெமிலி வட்டார கல்வி அலுவலகம் எதிரே நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நெமிலி வட்டார தலைவர் சம்பத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவராஜ், அரக்கோணம் கல்வி மாவட்ட செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் ஆனந்தசெல்வகுமார் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வி மாணவர்களை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடவேண்டும். தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு இணைய வழி ஆன்லைன் தேர்வுகளை திரும்பப்பெற வேண்டும். எமிஸ் இணையதள பதிவு முறையை கைவிடவேண்டும். காலை உணவு திட்டத்தை 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தவேண்டும். காலை உணவு திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் எஸ்.இ.ஆர்.டி. இயக்குனரின் உத்தரவை திரும்பபெறவேண்டும் என்ற 6 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Next Story