தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரம்பலூர் வட்டார கிளை, தனியார் கிளை ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டணியின் வட்டார தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் ராஜேஷ், கூட்டணியின் தனியார் கிளை வட்ட செயலாளர் செல்வம், பொருளாளர் புஷ்பா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட். பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்தும், அந்த முறையை கைவிட வேண்டும் என்றும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தலைவர் சந்திரசேகர், ஓய்வு பிரிவு செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதேபோல் ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அந்தந்த வட்டார கிளை, தனியார் கிளை ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story