தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது, 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் எட்வின், துரைராஜ் தோமினிக் சாவியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் குமார், தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெஸ்டின்ராஜ், ரவிச்சந்திரன், அன்புமணி, அபிராமி அருணா, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜான்போஸ்கோ, தேவ்ஆனந்தன், பாலகுரு, மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் தனுஷ்கோடி நன்றி கூறினார்.


Next Story