ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:45 PM GMT)

விழுப்புரத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும், பறிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் தமிழக அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ரஷிதா, வடிவேல், அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகசாமி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கங்காதரன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் அசோகன், வளர்மதி, மரியநேசன், கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் முரளி, சரவணன், விருஷபதாஸ், கோவிந்தன், லட்சுமி அம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தயாநிதி நன்றி கூறினார்.


Next Story