திருச்செந்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

திருச்செந்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள கற்றலின் இனிமை தொடக்கப்பள்ளி முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்செந்தூர் வட்டக்கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பேச்சிமுத்து கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், திருச்செந்தூர் வட்டாரத்தை சேர்ந்த ஆசிரிய-ஆசிரியைகள் 160 பேர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட துணைத்தலைவர் தர்மராஜ் நன்றி கூறினார்.

இதேபோல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆழ்வார்திருநகரி வட்டார கிளையின் சார்பில் ஆசிரியர்கள் மாவடிப்பண்ணை வட்டார வளமைய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அகஸ்டின் ஞானதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலை வகித்தார். மகேஷ் துரைசிங் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் டேவிட் பிரதாப்சிங், ஜெபா பாண்டியன், சுதாகர், நெல்சன், சுரேஷ் நியுமன், ரவி வசந்தசீலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயராஜ் நன்றி கூறினார்.


Next Story