ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். செயலாளர் விஜயகுமார், வட்டார செயலாளர் ஜெயபாரதி மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணையவழி ஆன்லைன் தேர்வுகளை கைவிட வேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டத்தில் பி.எட். மாணவர்களை கொண்டு ஆசிரியர்களின் கருத்துக்களை மதிப்பிடும் இயக்குனரின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும். காலை உணவு திட்டத்தை 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

முடிவில் வட்டார பொருளாளர் சூர்யமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story