ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகரில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரேவதி தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவன் தொடங்கி வைத்தார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் வைரமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் செல்வகணேசன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொடக்க கல்வித்துறையில் முறைகேடாக விதிக்கு புறம்பாக நடைபெறும் நிர்வாக மாறுதலை தவிர்க்க வேண்டும். பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவினை உடனடியாக அறிவித்து ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடத்திட வேண்டும். எஞ்சிய மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story