பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் திறமையான குழந்தைகளை பாராட்டி பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கர் விருது வழங்கப்படுகிறது. விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் சமுதாயத்தில் பரவலான மற்றும் வெளிப்படையாக தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் முன்மாதிரியாக திகழும் மற்றும் விதிவிலக்கான திறன்கள், சிறந்த சாதனைகள் படைத்த இளம் குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பங்களை https://awards.gov.in என்ற இணையதளத்தில் பதிவெற்றம் செய்து அதன் நகலை 31-ந் தேதிக்குள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் சி பிளாக்கில் 4-வது மாடியில் உள்ள சமூக நல அலுவலகத்திற்கு வந்துசேர வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.