பிரதமர் மோடி பிறந்தநாள் கபடி போட்டி
கலவையில் பிரதமர் மோடி பிறந்தநாள் கபடி போட்டி 2 நாட்கள் நடக்கிறது
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கலவை- வாழைப்பந்தல் சாலையில் மார்க்கெட் கமிட்டி அருகே பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் கபடி போட்டி நடைபெற உள்ளது. இப்பேட்டியை விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் பிரபு வெங்கடேசன், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் நாகேஸ்வரி ஆனந்தன் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story