பயனாளிகளுடன் பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல்


பயனாளிகளுடன் பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல்
x

மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். இதில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி, போஷான் அபியான் திட்டம், பிரதம மந்திரி மாற்று வந்தனா யோஜனா, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் மற்றும் அம்ருத், பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டம், ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை, பிரதம மந்திரி காரிய காரிப் கல்யான் அன்னா யோஜனா, ஆயுஷ்மன் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, ஆயுஷ்மன் பாரத் சுகாதார திட்டம், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, திட்ட இயக்குனர்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) செல்வி, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி, ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் மற்றும் அனைத்து ஒன்றியக்குழு தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story