முத்திரை பதித்த முத்தான திட்டங்கள் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை


முத்திரை பதித்த முத்தான திட்டங்கள் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை
x

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது ,

சென்னை,

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது ,

. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 5 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 6-வது ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .

தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும், விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.


Next Story