முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பொறுப்பேற்பு
முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோயம்புத்தூர்
கோவை
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய சுமதி ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாறுதல் செய்யப்பட்டார்.
சுமதி ராணிப்பேட்டையில் பணியில் சேர்வதற்கு முன்பு கரூர் மாவட்டத்திற்கு மாற்றப் பட்டார். இதற்கிடையே திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய பாலமுரளி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கோவை மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்ட பாலமுரளி நேற்று காலை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் தனது இருக்கைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story