ரேஷன் கடையில் முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு


ரேஷன் கடையில் முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு
x

ரேஷன் கடையில் முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு

மதுரை

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கிருந்த விற்பனையாளர் ஷீலாவிடம் கடையின் இருப்பு குறித்து கேட்டறிந்த அவர் அரிசியின் தரத்தையும் சோதனை செய்தார்.பின்னர் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் கடையின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் புதுப்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பொருட்கள் வாங்க வேண்டி உள்ளதால் தங்களுக்கு தனியாக பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.முதன்மைச் செயலாளரின் திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story