பள்ளி கட்டிட சீரமைப்பு பணிக்கு முன்னுரிமை


பள்ளி கட்டிட சீரமைப்பு பணிக்கு முன்னுரிமை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:38+05:30)

பள்ளி கட்டிட சீரமைப்பு பணிக்கு முன்னுரிமை

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் சீனிவாசன் தலைமை தாங்கினர். உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், 19 ஊராட்சிகளிலும் இன்று(வியாழக்கிழமை) கிராம சபை கூட்டம் நடத்துவது, அதில் அனைத்து துறை அதிகாரிகளையும் பங்கேற்க வைப்பது, குடியரசு தினத்தையொட்டி பள்ளிகளில் தலைமை ஆசிரியரால் மட்டுமே தேசியக்கொடி ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் அங்கலக்குறிச்சி, திவான்சாபுதூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்படும் கழிவுகளை கொண்டு செல்ல ரூ.6 லட்சம் மதிப்பில் டிராக்டர் வழங்கப்படும், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கட்டிட சீரமைப்பு பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும், ஊராட்சி அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை வழங்கப்படும் என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இது தவிர தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் ஊராட்சி தலைவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story