சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்தால் 5 ஆண்டு சிறை கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை


சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்தால் 5 ஆண்டு சிறை  கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை
x

சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்தார்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுத்தல் சட்டப்படி குற்றமாகும். இதைமீறி சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வாங்குவதும், விற்பதும், அதற்கு துணையாக செயல்படுவதும் கண்டறியப்பட்டால், இளைஞர் நீதிச் சட்டத்தின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கப்படும். குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர் www.CARA.nic.in என்கிற வெப்சைட்டில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேலும் இது குறித்த விவரங்கள் அறியவும், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுத்தல் குறித்து தகவல் தெரிவிக்கவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை 04286- 233103 என்ற எண்ணிலும், பராமரிக்கும் கரங்கள் சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தை 9843150255 என்ற எண்ணிலும், சைல்டு லைன் இலவச தொலைபேசி எண் 1098 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம். தகவல் கொடுப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story