நிதி நிறுவன ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய சக ஊழியர்கள் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை


நிதி நிறுவன ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய சக ஊழியர்கள் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
x

திருப்பூரில் நிதி நிறுவன ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய சக ஊழியர்கள் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர்


திருப்பூரில் நிதி நிறுவன ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய சக ஊழியர்கள் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்கொலைக்கு தூண்டினர்

திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 35). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். அந்த நிதி நிறுவனத்தில் இருந்து செல்வராஜ் ஏற்பாட்டின் பேரில் வாடிக்கையாளருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்துள்ளனர்.

ஆனால் கடன் பெற்ற நபர் தலைமறைவானதால் ரூ.2 லட்சத்துக்கு செல்வராஜ் தான் பொறுப்பு என்றும், அவர் தான் பணத்தை கட்ட வேண்டும் என்றும் அந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்த கோவையை சேர்ந்த ராஜசேகர் (41), நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த தேவராஜ் (37), ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (35) ஆகியோர் கூறியுள்ளனர்.

7 ஆண்டு சிறை

இதனால் மனம் உடைந்த செல்வராஜ், முத்தனம்பாளையத்தில் உள்ள வீட்டில் கடந்த 15-6-2015 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தற்கொலைக்கு தூண்டியதாக ராஜசேகர், தேவராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக ராஜசேகர், தேவராஜ், சுரேஷ்குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் உதவி அரசு வக்கீல் பஷீர் அகமது ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story