மதுரை சிறையில் கைதி திடீர் சாவு
மதுரை சிறையில் கைதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
மதுரை
மதுரை கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவர் அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று இரவு திடீரென்று அவர் சிறையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்த சிறை போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது முருகன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story