அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதல்; பயணிகள் உயிர் தப்பினர்


அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதல்; பயணிகள் உயிர் தப்பினர்
x

அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதல்; பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சி

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த முக்கன்பாலம் அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் 43 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ்சின் பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் ஒரு தனியார் பஸ் வந்தது. அந்த பஸ்சில் 25 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது அந்த தனியார் பஸ், அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இதில் தனியார் பஸ்சின் முன்பகுதியும், அரசு பஸ்சின் பின்பகுதியும் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story