தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து - கல்லூரி மாணவர்கள் பலி
வாழப்பாடி அருகே தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாழப்பாடி,
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த பிரபு (வயது 22), நவீன்(21) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் பஸ்சின் எதிரே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.இதில் பலத்த காயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பஸ் - மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 2 கல்லூரி வாலிபர்கள் பலியான சம்பவம் பரபரப்பையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.