தனியார் பஸ் டிரைவருக்கு அடி-உதை; வாலிபர் கைது
தனியார் பஸ் டிரைவருக்கு அடி-உதை; வாலிபர் கைது
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி கோமதிநகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 24). இவர் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
மற்றொரு தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரியும் முறப்பநாட்டை சேர்ந்த மாரி என்பவருக்கும், நெல்லை வண்ணாரப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் மாலை நேரத்தில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டது.
இதில் துவரங்காட்டை சேர்ந்த குமார் மற்றும் கலியாவூரை சேர்ந்த சுப்பையா என்ற சுபாஷ் (21) ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கட்ராமனை மிரட்டி அடித்து உதைத்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.
இது குறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பையா என்ற சுபாஷை கைது செய்தார்.
Related Tags :
Next Story