சங்ககிரியில்தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்முருக பக்தர்களை இருக்கையில் அமர வைக்காததால் ஆத்திரம்


சங்ககிரியில்தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்முருக பக்தர்களை இருக்கையில் அமர வைக்காததால் ஆத்திரம்
x

சங்ககிரியில் தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அவர்கள் முருக பக்தர்களை இருக்கையில் அமர வைக்காததால் ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சங்ககிரி,

முருக பக்தர்கள்

சங்ககிரி டி.பி.ரோடு பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் 15 பேர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி சென்று அங்கு முருகனை தரிசனம் செய்துவிட்டு, நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் சங்ககிரி செல்ல ஈரோடு பஸ் நிலையம் வந்தனர். அப்போது, ஈரோட்டில் இருந்து சங்ககிரி செல்ல சேலம் செல்லும் தனியார் பஸ்சில் 15 பேரும் ஏறி அமர்ந்திருந்தனர்.

அப்போது தனியார் பஸ் கண்டக்டர் ஈரோட்டைசேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் சேலம் செல்லும் பயணிகள் மட்டும் இருக்கையில் அமரவேண்டும் என கூறி, சங்ககிரி செல்லும் முருக பக்தர்கள் 15 பேரை இருக்கையை விட்டு எழுந்து நிற்க சொன்னதாக தெரிகிறது. அதனால் 15 பேரும் சங்ககிரிக்கு நின்றுகொண்டே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முருகபக்தர்கள் தங்களது பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தனர். பக்தர்களை இருக்கையில் அமர வைக்காதது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சிறைபிடிப்பு

இதைத்தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் சங்ககிரி போலீஸ் நிலையம் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பஸ்சை சிறைபிடித்தனர். மேலும் முருக பக்தர்களை எழுந்திருக்க கூறிய கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் தனியார் பஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் கண்டக்டர் பிரதீப்குமார் ஆகியோரிடம் பயணிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினர். அதன்பிறகு முருக பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர். பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story