தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் குமாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு மகள் மகாலட்சுமி(வயது 19). இவர் பிறந்து 6 மாதம் முதல் அவரது பெரியம்மா இந்திரா வளர்த்து வந்தார். மகாலட்சுமி, கப்பியாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இந்திராவின் கணவர் இருதய அறுவை சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் அவரை பார்த்துவிட்டு மகாலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். அவ்வாறு செல்லும்போது வீட்டு சாவியை மறந்து சென்று விட்டார். இதனால் மகாலட்சுமியை அவரது பெரியம்மா இந்திரா செல்போனில் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிறகு சாவியை இந்திராவின் கொழுந்தனார் சுப்பையா கொண்டு சென்றபோதும் மகாலட்சுமி, வீட்டில் இல்லாமல் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார். இதனால் மீண்டும் மகாலட்சுமியை திட்டியுள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மகாலட்சுமி, புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story