தனியார் கல்லூரி துணை முதல்வர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு


தனியார் கல்லூரி துணை முதல்வர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு
x

ஜெயங்கொண்டம் அருகே தனியார் கல்லூரி துணை முதல்வர் மனைவியிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே என்.ஏ.ஜி. காலனி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 38). இவர் தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி லதா (30) மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் பின்பக்க கதவுகளை திறந்து வைத்து கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவர் வீட்டிற்குள் புகுந்தார். பின்னர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7¼ பவுன் சங்கிலியை பறித்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லதா சத்தமிடவே ராஜன் அந்த ஆசாமியை துரத்தி சென்றார். ஆனால் அந்த ஆசாமி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story