பள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது


பள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது
x

பள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை,

10-ம் வகுப்பு மாணவி

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 25). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வீட்டில் இருந்தே பணியாற்றும் இவர் மாதத்தில் ஒரு முறை மட்டும் நிறுவனத்திற்கு நேரில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பிரவீன்குமார் புதுக்கோட்டையில் 17 வயது சிறுமியான 10-ம் வகுப்பு மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும், அவரை ஆபாசமாக செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவியின் தாயார் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் பல இளம்பெண்களிடம் காதலிப்பதாக கூறி பழகி அதனை செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதான பிரவீன்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயாராகி உள்ளனர்.

1 More update

Next Story