குடிபோதை தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கைது
குடிபோதை தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கைது
சூலூர்
சூலூர் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது45). இவரது தம்பி ஆனந்தன் (35). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் நிறுவனத்தின் பின்புறம் உள்ள அறையில் அங்கு பணிபுரியும் மோகன் (62) என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி அங்கு பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் பின்புறம் உள்ள அறைக்கு சென்ற போது அங்கு ஆனந்தன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரிடம் போலீசார் விசாரித்த போது மது அருந்திய போது தனக்கும் மோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் தன்னை மோகன் அடித்து காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அடிபட்டவரின் அண்ணன் அளித்த புகாரின் பேரில் மோகனை போலீசார் கைதுசெய்தனர்.