ரெயிலில் அடிபட்டு தனியார் கம்பெனி ஊழியர் பலி
ரெயிலில் அடிபட்டு தனியார் கம்பெனி ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்
ஆவடி அடுத்த திருநின்றவூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 50). இவர் சென்னை தனியார் கம்பெனியில் கணக்கராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கிருபாநிதி (43). இவர்களுக்கு கவிதா (19), லட்சுமி (15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் நெமிலிச்சேரி ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் ரெயில்வே போலீசார் உயிரிழந்த தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story