தண்டவாளத்தில் தனியார் நிறுவன ஊழியர் பிணம்-தற்கொலையா? போலீசார் விசாரணை


தண்டவாளத்தில் தனியார் நிறுவன ஊழியர் பிணம்-தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Aug 2022 3:17 AM IST (Updated: 29 Aug 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் தண்டவாளத்தில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக கிடந்தார்.அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அடுத்த திமிரிக்கோட்டை அருகே ெரயில் தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தர்மபுரி ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர், கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ஸ்ரீதர் (வயது 30) என்பது தெரிய வந்தது. இறந்த ஸ்ரீதர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெண் குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதர் எப்போதும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story