லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்;தனியார் நிறுவன ஊழியர் பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்;தனியார் நிறுவன ஊழியர் பலி
x
நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கண்ணன் (வயது34). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு கண்ணன் தனது மோட்டார் சைக்களில் நாமக்கல் - சேலம் சாலையில் பஸ்நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

பதிநகர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தபோது சாலையில் திரும்ப முயன்ற லாரியின் பின்புறத்தில் இவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story