ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 17 April 2023 11:39 PM IST (Updated: 18 April 2023 3:07 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

ராணிப்பேட்டை

திருவள்ளூர் மாவட்டம் மணவூர் மருதவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 39). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை மணவூர் - செஞ்சி பனப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தை கடந்த போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற புறநகர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானர்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story