தனியார் நிறுவனஊழியர் தற்கொலை


தனியார் நிறுவனஊழியர் தற்கொலை
x

தனியார் நிறுவனஊழியர் தற்கொலை

கோயம்புத்தூர்

கணபதி

கோவை கணபதி அருகிலுள்ள சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் செல்வம் (வயது55). இவர் கணபதி பாலன் நகரில் உள்ள கிரைண்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.கடந்த 4 வருடங்களாகவே கடுமையான நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்ட அவர், சுதந்திரதினத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story