தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலி

கிணத்துக்கடவு அருகே விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலியானார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடி கஜேந்திரன் நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 43), தனியார் நிறுவன மேற்பார்வையாளர். இவரது மனைவி வேணி (31). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கணேஷ் மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டு புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார்.
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை தாமரைக்குளம் அடுத்த சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது, அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் கணேசசை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் காரை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த விஜய பிரபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






