தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இ்ன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைதேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனத்தினர் தங்கள் வருகை மற்றும் தேவையான காலியிடங்கள் குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை தேடுபவர்கள், வேலையளிப்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருந்தால் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2999152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.