தனியார் வேலைவாய்ப்பு முகாம்


தனியார் வேலைவாய்ப்பு முகாம்
x

நெல்லையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பெருமாள்புரம் சி காலனி சிதம்பரம்நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் கல்வி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் பங்கேற்று பயனடையலாம். இதில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் மரியசகாய அந்தோணி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story