தனியார் நிதிநிறுவன மேலாளர் சாவு
தனியார் நிதிநிறுவன மேலாளர் சாவு
திருவையாறை அடுத்த காமராஜ் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கார்த்திக் (வயது35). இவரது மனைவி பிரபாவதி (32). இவர்களுக்கு 2 ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வேலையை முடித்து தனது மோட்டார்சைக்கிளில் திருச்சியில் இருந்து திருவையாறுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாத்தனூர் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த கட்டையில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திக் இறந்தார். இதுகுறித்து பிரபாவதி கொடுத்த புகாரின் பேரில் மருவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.