தனியார் நிதி நிறுவன காசாளர் கைது


தனியார் நிதி நிறுவன காசாளர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவன காசாளர் கைது

கோயம்புத்தூர்

கணபதி

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது38). என்ஜினீயர். இவர் அவசர பணத்தேவை காரணமாக தனது தங்க நகையினை அடமானம் வைக்க முடிவு செய்தார்.

இதற்காக இவர் கோவை சிவானந்தாகாலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தனது 2 பவுன் தங்கநகையை அடமானம் வைத்தார். அதற்கு ரூ.41 ஆயிரம் பெற்று மாதா மாதம் தொடர்ந்து வட்டியினை செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது நகையினை மீட்டு எடுக்க நேற்று முன்தினம் அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார்.

அங்கு அந்த நிறுவனம் பூட்டு போட்டு மூடப்பட்டு கிடந்தது. உடனடியாக அந்த நிதி நிறுவன காசாளருக்கு போன் செய்து பார்த்த போது அவர் போனை எடுக்கவில்லை. பலமுறை முயற்சித்தும் போனை எடுக்காததால் பிரான்சிஸ் சந்தேகம் அடைந்தார்.இதனால் அந்த நிதி நிறுவனம் குறித்து அருகில் விசாரித்தார்.அங்கிருந்தவர்கள் அந்த நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த பிரான்சிஸ் உடனடியாக ரத்தினபுரி போலீசாரிடம் அந்த நிதி நிறுவனம் குறித்து புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நிதி நிறுவன காசாளரான நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story