அரியலூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்


அரியலூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்
x

தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரியலூரில் நாளை நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. முகாமில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர். இதில் விருப்பமுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்றுடன் வந்து கலந்து கொள்ளலாம். 5 முதல் 12-ம் வகுப்பு வரை (தேர்ச்சி, தோல்வி) கல்வி தகுதி ஆகும். 19 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329 228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story