தனியார் பள்ளி பஸ் வயலுக்குள் கவிழ்ந்தது 25 மாணவர்கள் காயம்


தனியார் பள்ளி பஸ் வயலுக்குள் கவிழ்ந்தது 25 மாணவர்கள் காயம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பஸ் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ-மாணவிகள் 25 பேர் காயம் அடைந்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தனியார் பள்ளி பஸ்

கள்ளக்குறிச்சியில் இருந்து தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பொற்படாக்குறிச்சி வழியாக கனங்கூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பொற்படாக்குறிச்சிக்கும், எறவார் கிராமத்துக்கும் இடையே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர்.

25 பேர் காயம்

இதைப்பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், அக்கம்பக்கத்தினரும் ஓடிச்சென்று பஸ்சுக்குள் சிக்கிய மாணவ-மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தில் வானவரெட்டி கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் சத்ருஜி, கனங்கூர் பிரபு மகள் தஷ்வினா, குமார் மகன் அகிலேஷ், தீபிகா, மலைக்கோட்டாலம் கிராமம் குமரேசன் மகன் எழிலரசன், விளம்பார் கிராமம் சுப்பிரமணி மகள் மகேஸ்வரி, காட்டனந்தல் கிராமம் தஷ்மிதா, கவினேஷ் மற்றும் கிஷோர்குமார், மொழிதேவன், இனியா, கவுதம் உள்பட 25 மாணவர்கள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story