தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும் இளைஞர்கள், இளம்பெண்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தனியார் துறையினர் தங்களது நிறுவனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வானார்கள். தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். இதேபோல் முத்துராஜா எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் இதுவரை மகளிர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு துறை மூலம் 23 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 3,690 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக கலெக்டர் தொிவித்தார். முகாமில், மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத் அலி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) மணிகண்டன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில் வளர்ச்சி) வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் கைக்குழந்தைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், அந்த குழந்தைக்கு டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார்.


Next Story