தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனத்தில் நடத்துகின்றன.
இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளன. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.