தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

திருப்பத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7-ந் தேதி நடக்கிறது.

திருப்பத்தூர்

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 7-ந் தேதி திருப்பத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு, பொறியியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ., மருத்துவம் சார்ந்த படிப்பு படித்த வேலைவாய்ப்பற்ற ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story