தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
x

கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதம் தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் ஒசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிய 18 முதல் 20 வயதுக்குட்பட்ட 2021 மற்றும் 2022-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் கலந்துக்கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 மாத பயிற்சியும், மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் மற்றும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி, உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story