தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

நெமிலியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி ஒன்றியத்தில், கிராமப் புறங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திருவிழா மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் நானிலதாசன் தலைமை தாங்கினார். முகாமில் நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகாக்களில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

அப்போது இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் சீரிய முயற்சியில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் வாழ்வு வளம் பெறும் என்றார்.

முகாமில் நெமிலி ஒன்றிய குழு துணைத் தலைவர் ச.தீனதயாளன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், தனியார் கம்பெனிகளின் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த மகளிர், இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story