தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

கீழ்பென்னாத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 27-ந் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.

இதில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும் தனியார் வேலை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

1 More update

Related Tags :
Next Story