சேலம் கோரிமேட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-நாளை மறுநாள் நடக்கிறது


சேலம் கோரிமேட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-நாளை மறுநாள் நடக்கிறது
x

சேலம் கோரிமேட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கின்றனர். 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story