தனியார் நிறுவன காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தனியார் நிறுவன காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 53). இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்துடன் ராணிப்பேட்டை பெல் நரசிங்கபுரம் பகுதியில் தேவாலயத்திற்கு பக்கத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் தனியார் தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக பணிக்கு சேர்ந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மலைமேடு பகுதியில் உள்ள செயல்படாத கம்பெனியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் தன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் தன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.