பிரியா நினைவு மகளிர் கால்பந்து போட்டி - கால்பந்தை வீராங்கனைகளிடம் கொடுத்து போட்டியைத் துவக்கி வைத்த பிரியாவின் தாயார்
பிரியாவின் தாயார், கால்பந்தை அங்கிருந்த வீராங்கனைகளிடம் கொடுத்து போட்டியைத் துவக்கி வைத்தார்.
சென்னை,
தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், மறைந்த கால்பந்து வீராங்கனை பிரியா நினைவாக சென்னை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன் தொடக்க நிகழ்வில் அமைச்சர்கள் மெய்யநாதன், சேகர்பாபு, முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் சையத் சபீர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் 16 கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் பிரியாவின் தாயார் கையில் கால்பந்தைக் கொடுத்து போட்டியைத் துவக்கி வைக்குமாறு அமைச்சர்கள் சேகர்பாபுவும், மெய்யநாதனும் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து பிரியாவின் தாயார், கால்பந்தை அங்கிருந்த வீராங்கனைகளிடம் கொடுத்து போட்டியைத் துவக்கி வைத்தார்.
Related Tags :
Next Story