பிரியங்கா காந்தி பிறந்தநாள், பொங்கல் விழா கொண்டாட்டம்


பிரியங்கா காந்தி பிறந்தநாள், பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிறந்தநாள், பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா குறிஞ்சிநகரில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி மாநில பொதுசெயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருான கே.பெருமாள்சாமி தலைமை தாங்கி கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கட்சி தொண்டர்கள் 100 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் முத்துகுட்டி முன்னிலை வகித்தார்.

விழாவில் தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டி.டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டலதலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு மாநகர தலைவர் ஏ.ஜே.அருள்வளன், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story